71 வது தேசிய சுதந்திர தின விழா

1948 பெப்ரவாரி 04 ஆம் திகதி இலங்கை திரு நாட்டின் சுதந்திரம் கிடைத்து 71 வது வருட சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வுக்கு இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவின் தேசிய தின நிகழ்வுகள் வெகு விமர்சையாக மஹவிலச்சிய பிரதேச செயலாளர் திரு ஈ.ஆர் திலகரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் பணியாளர் குழாத்தின் பங்குபற்றலுடன் 2019.02.04 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் விழாவின் ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியத்தை வெளிக்காட்டியதுடன், சுதந்திர வீரர்களை நினைவுகூர்ந்து 02 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பிற்பாடு மஹவிலச்சிய பிரதேச செயலாளரினால் அலுவலக உத்தியோகத்தர்களை நோக்கி அரசாங்க உத்தியோகத்தர்களாக சகலரும் தமது கடமையை சரியாகவும் மற்றும் தியாகத்துடனும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இலங்கையினுல் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் தியாகத்துடன் சேவையாற்ற வேண்டும் என்றார். இறுதியாக சகல உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் சிரமதானம் ஒன்று செய்யப்பட்டு 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.















