தர்ம போதனை நிகழ்ச்சித் திட்டம் – திரிபிடகாபிவந்தனா வாரம்

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் ஏழாம் நாளை முன்னிட்டு மஹவிலச்சிய பிரதேச செயலாளர் திரு ஈ.ஆர்.திலகரத்ன அவர்களின் தலைமையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி தர்ம போதனை நிகழ்ச்சித் திட்டம் ஒன்று மஹவிலச்சிய பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அநுராதபுரம் மிரிசவெடிய விகாரையின் தலைமை மதகுரு கலைமானி பண்டிதர் மதிப்புக்குரிய ஈதல்வெடுனாவே ஞானதிலக அவர்களால் தர்ம போதனை நிகழ்த்தப்பட்டது.
மஹவிலச்சிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந் நிகழ்வில் பங்குபற்றியதுடன், அங்கு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான திரிபிடகாபிவந்தனா உறுதிமொழியளித்தலும் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
'திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரவாதி திரிடக தொடர்பான செயலமர்வு

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் ஆராவது தினத்தை முன்னிட்டு 2019.03.21ஆம் திகதி தேரவாதி திரிபிடக தொடர்பான செயலமர்வொன்று பேமடுவ கலாசார நிலையத்தில் நடைபெற்றது. மஹவிலச்சிய பிரதேச செயலாளர் உட்பட அலுவலக பணியாளர்கள், பிரதேச பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை பிரதான ஆசிரியர்கள் உட்பட ஏனைய ஆசிரியர்கள் மற்றும்’ பிரதேச மக்கள் ஒன்றிணைவுடன் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டது.
அங்கு திரிபிடக தொடர்பான உரை நிகழ்த்த பேமடுவ கலாகார நிலைய பொறுப்பதிகாரி திரு செனரத் ஏக்கநாயக்க வளவாளராக பங்குபற்றினார்.
'திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பௌர்னமி தின நிகழ்ச்சித் திட்டம்.
திரிபிடகாபிவந்தனா வாரத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு 2019.03.20 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலக பிரிவிலுள்ள சகல விகாரைகளை மையப்படுத்தி பௌர்னமி தினம் மத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
அங்கு 500 க்கு மேற்பட்ட மத வழிபாட்டாளர்களுக்கு தர்ம கலந்துரையாடல் மற்றும் பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
















